சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, அரசவை ஆகியவை அண்மையில், வேளாண்மை வல்லரசு கட்டுமானத்தை முன்னெடுக்கும் திட்டம்(2024-2035)வெளியிட்டுள்ளன.
அத்திட்டத்தில், 2027ம் ஆண்டு வரை, வேளாண்மை வல்லரசு கட்டுமானம், கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது ஆகியவை, தெளிவான முன்னேற்றங்களைப் பெற வேண்டும். வேளாண்மை மற்றும் கிராமப்புற நவீனமயமாக்கம், புதிய வளர்ச்சி கட்டத்தில் நுழைய வேண்டும். 2023ம் ஆண்டு வரை, வேளாண்மை வல்லரசு கட்டுமானம், குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்று, வேளாண்மை நவீனமயமாக்கத்தை அடிப்படையாக நனவாக்க வேண்டும். நவீன வாழ்க்கைக்கான நிபந்தனைகள் கிராமப்புறங்களில் அடிப்படையாக உருவாக்கப்பட வேண்டும். நடப்பு நூற்றாண்டின் பாதியில், வேளாண்மை வல்லரசு முழுமையாக கட்டியமைக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவது, வேளாண்மை மற்றும் கிராமப்புற நவீனமயமாக்கம் முழுமையாக நனவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
படம்:VCG