சீன வணிகத் துறை அமைச்சம் 6ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, சீனாவானது, சீனாவும் உலகமும் ஏற்றுமதி சார்ந்த பெரிய சந்தையைப் பகிர்ந்து கொள்ளுதல் எனும் தொடர் நடவடிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு 10 கருப்பொருட்கள் க்கொண்ட நூற்றுக்கணக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக இவ்வமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹே யா தோங் கூறுகையில்,
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சீனாவானது தனது மிகப் பெரிய சந்தை வளர்ச்சி வாய்ப்புகளை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது என்றார். மேலும், வெளிநாட்டுத் திறப்பு அளவைத் தொடர்ந்து விரிவாக்கி, உலகின் பல்வேறு நாடுகள் சீனாவுடன் கையோடு கை கோர்த்து, வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்துகொண்டு, கூட்டு வளர்ச்சியை நனவாக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
