சிவகார்த்திகேயன் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ திரைப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தனது நடிப்பிற்காக கிடைத்த ரசிகர்களின் அன்பும் ஆதரவையும் குறித்து மனம் திறந்தார்.
அப்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் குறித்து அவர் கூறியது சிறப்பு கவனம் பெற்றது.
“விஜய் சார்கூட நடித்த பிறகு, சிலர் என்னை ‘குட்டி தளபதி’, ‘திடீர் தளபதி’னு கிண்டல் பண்ணாங்க. ஆனா விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார்; நானும் வாங்கியிருக்க மாட்டேன்,” என்றார் அவர்.
‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
