தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப் பொங்கல் வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்களில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.