சீனத் தேசிய ரயில் குழுமம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், சீன தேசியளவில் ரயில் போக்குவரத்து துறையின் நிலையான இருப்பு முதலீட்டுத் தொகை 44 ஆயிரத்து 60 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கம் முதல் இது வரை, நாட்டின் முக்கிய நெடுநோக்குத் திட்டம் மற்றும் பிராந்திய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனத் தேசிய ரயில் குழுமம் கவனம் செலுத்தி வருகிறது. ரயில் வலைப்பின்னல் மற்றும் தொடர்பை வலுப்படுத்தும் செயல்களை நடைமுறைப்படுத்தி, ரயில் வரைவுக் கட்டுமானத்தை அறிவியல்ப்பூர்வமாக விரைவுபடுத்தி வருகிறது. இவ்வாண்டின் முதல் 6 மாத காலத்தில் புதிதாக கட்டியமைக்கப்பட்டு சேவையளிக்கும் ரயில் பாதையின் நீளம் 355.2 கிலோமீட்டராகும்.
