உஸ்பெகிஸ்தான் தலைமையமைச்சர் அரிபோவின் அழைப்பை ஏற்று, சீன தலைமையமைச்சர் லீச்சியாங் அக்டோபர் 17ஆம் நாள் மாலை, உஸ்பேகிஸ்தானில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், இரு நாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 34 ஆண்டுகளில், சர்வதேச நிலைமை மாறி வந்த போதிலும், சீனாவும் உஸ்பெகிஸ்தானும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமமாக நடந்து வருகின்றன. இரு நாட்டுறவும் ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக முன்னேறி, புதிய வாய்ப்பு மற்றும் புத்துயிரை இடைவிடாமல் பெற்று வருகின்றன. அதற்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், உஸ்பேகிஸ்தான் அரசுத் தலைவர் மிர்சியோயெவ் பிஷ்கெகில் நடத்திய சந்திப்பில், இரு நாட்டுறவை மேலும் ஆழமாக்குவது பற்றி முக்கிய பொது கருத்தை எட்டியுள்ளனர். சீனா, உஸ்பெகிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் பொது கருத்தை, மேலதிக பயனுள்ள சாதனைகளை மாற்றி, இரு நாட்டின் மனிதகுல பொதுச் சமூகக் கட்டுமானத்தை முன்னேற்ற விரும்புவதாக லீச்சியாங் தெரிவித்தார்.
