ஹங்கேரி அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பாகா ஆண்ட்ராஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 19ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-ஹங்கேரி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 77 ஆண்டுகளாக, இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமத்துவ முறையில் செயல்பட்டு, கூட்டு வெற்றியடைந்து, பல்வேறு துறைகளில் சாதனைகளைப் பெற்று வருகின்றன என்றார். மேலும், சீன-ஹங்கேரி உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிப்பதாகவும், அரசுத் தலைவர் பாகா ஆண்ட்ராஸுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையையும் பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளையும் ஆழமாக்கி, புதிய யுகத்தில் இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் சிறப்பாக நன்மை புரிய விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
