சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் மற்றும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுஜியோனோவின் அழைப்பின் பேரில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யி ஆகஸ்ட் 19 முதல் 22ஆம் வரை நாள் தென் கொரியா மற்றும் இந்தோனோசியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தோனேசியாவில், சீன-இந்தோனேசிய பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் முதல் கூட்டத்துக்கு வாங்யி தலைமை தாங்குவார். அப்போது, அவர் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங்ஜுனுடன் இணைந்து, சீன-இந்தோனேசிய வெளியுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் 2ஆவது அமைச்சர் நிலைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்.
