பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஜியோ குட்டப்பன் காலமானார் ..!

Estimated read time 1 min read

மூத்த மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜியோ குட்டப்பன், புதன்கிழமை கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 90. அவரது 90-வது பிறந்தநாளைக் கொண்டாட அவரது குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிகாலை சுமார் 1.30 மணியளவில் எர்ணாகுளம் மருத்துவ மையத்தில் அவர் உயிரிழந்தார்.

மலையாளத்தில் “ஜியோ சினிமாஸ்” என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் “இனிப்பும் புளிப்பும்”, “ஏழாம் கடலின் அக்கறையே”, “மீன்”, “ஈநாடு”, “மினிமோல்” உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ள இவர், பெரும்பாலும் இயக்குனர் ஐ.வி. சசி இயக்கத்தில் தான் அதிக படங்களைத் தயாரித்துள்ளார்.

குறிப்பாக மணிரத்னம் திரையுலகில் கால்பதித்த காலகட்டத்தில் 1984ல் அவரது இரண்டாவது படமாக மோகன்லால் மற்றும் சுகுமாரனை வைத்து மலையாளத்தில் இயக்கிய “உணரு” என்கிற படத்தையும் இவர்தான் தயாரித்தார். இவரது மறைவிற்கு மலையாள திரை உலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author