புதுடெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் எல்லைக்கு வெளியே அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகளை இந்திய அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றியுள்ளனர்.
தூதரகத்தின் அனுமதி அளிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் உள்ள பகுதியில் விசா பிரிவிற்கான காத்திருப்பு பகுதிகள் மற்றும் வரிசை மேலாண்மை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் வெளிப்பகுதியில் இருந்த உலோகத் தடுப்புகள் மற்றும் சிமெண்ட் கட்டமைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகள் புல்டோசர் மூலம் அதிரடி அகற்றம்
