இந்திய விஞ்ஞானியின் சாதனை: புரட்சியை ஏற்படுத்தும் ‘3D சிப் மினி-மூளை’  

Estimated read time 1 min read

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் குமார் மிருத்யுஞ்சய் தலைமையிலான குழு, உயிருள்ள நியூரான்கள் மின்னணு சாதனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு புரட்சிகரமான 3D பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது.

நரம்பியல் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றை இணைக்கும் இந்த ஆய்வு ‘நேச்சர் எலக்ட்ரானிக்ஸ்’ (Nature Electronics) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மனித மூளையின் செயல்பாடுகளை மிக நெருக்கமாகப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், கற்றல், நினைவாற்றல் மற்றும் எதிர்கால பயோ-எலக்ட்ரானிக் கணினி முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு புதிய வழியை விஞ்ஞானிகளுக்கு வழங்குகிறது.

உயிரியல் மற்றும் இயந்திரங்களுக்கு இடையிலான எல்லையை இது தகர்த்துள்ளது.

You May Also Like

More From Author