சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் சீன அரசவை 2024 முதல் 2035ஆம் ஆண்டு வரை கல்வி மூலம் வல்லரசை உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 19ஆம் நாள் வெளியிட்டது.
இதில் கல்விக்கான நெடுநோக்கு ஒதுக்கீட்டு அமைப்பு முறையை மேம்படுத்துவது பற்றிய கருத்து முதன்முறையாக முன்வைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டு அளவை பல்வேறு நிலை அரசுகள் அதிகரிக்க வேண்டும்.
கல்விக்கான பொது செலவையும் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின்படி சராசரியான பொது கல்விச் செலவையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்விக்கான நிதிச் செலவு 4 விழுக்காடுக்கு மேல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உயர் கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகம் ஆழமாக இணைந்துள்ள முறையில் கல்விக்கான நிதித் திரட்டல் அமைப்பு முறையை உருவாக்க வேண்டும்.
பல்வேறு நிலை கல்வி நிதியங்களின் பங்களிப்பை வெளிக்கொணர்ந்து சமூகச் சக்தியின் பங்களிப்பு மற்றும் கல்விக்கான நன்கொடையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.