2025ல் சௌதி அரேபியாவில் முதலாவது ஒலிம்பிக் மின்னணு விளையாட்டுப் போட்டி

Estimated read time 0 min read

மின்னணு விளையாட்டுத் துறையைச் சார்ந்த முதலாவது ஒலிம்பிக் போட்டி 2025ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 23ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்று வரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 142ஆவது முழு அமர்வில் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவு ஒன்றில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


சௌதி அரேபியாவின் ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து முதலாவது ஒலிம்பிக் மின்னணு விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்ததோடு,

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி துவங்கும் முன்பு பரிசீலனைக்காக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முழு அமர்விடம் தொடர்புடைய முன்மொழிவைத் தாக்கல் செய்யும் என்றும் கூறியது.

Please follow and like us:

You May Also Like

More From Author