சீன-ஜோர்டான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 23ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா II பின் அல்-ஹுசைனுடன் இணைந்து சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற அந்நாட்டின் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சாஃபாதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

மன்னர் அப்துல்லா II பின் அல்-ஹுசைனுடனான நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பேணி மதிப்பதாக தெரிவித்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு, ஜோர்டான் மன்னர் சீனாவில் மீண்டும் பயணம் மேற்கொண்டிருக்கின்றார். இப்பயணம் வெற்றிகரமாக நிறைவடையும் என நம்புகின்றோம். சீனா மீதான நட்பார்ந்த கொள்கையிலும் ஒரே சீனா கொள்கையிலும் ஜோர்டான் ஊன்றி நின்று வருவதை சீனா பாராட்டுகிறது என்றார்.

சாஃபாதி கூறுகையில்,

மன்னரின் சீனப் பயணத்திற்கான ஏற்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான உபசரிப்புக்கு நன்றி தெரிவிக்கின்றோம். சீனாவுடன் உறவில் ஜோர்டான் கவனம் செலுத்தி வருகிறது. சீனாவுடன் சேர்ந்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்க ஜோர்டான் விரும்புகிறது. மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனா ஆற்றியுள்ள ஆக்கப்பூர்வமான, பொறுப்பு மிக்க பங்குகளை ஜோர்டான் வெகுஉயர்வாக மதிப்பளிப்பதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author