தென் கொரிய அரசுத் தலைவரின் பாதுகாப்புத் துறைத் தலைவர் பார்க் ஜாங் ஜுன் 10ஆம்நாள் தென் கொரிய காவற்துறையின் தேசிய விசாரணை தலைமையகத்திற்கு வந்து காவற்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைத்தார்.
இந்த விசாரணைக்கு முன்பு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இடைநீக்கம் செய்யப்பட்ட அரசுத் தலைவர் யூன் சுக்-இயோலின் கைது உத்தரவு தொடர்பாக சட்டரீதியான சர்ச்சைகள் உள்ளன. யூன் சுக்-இயோலின் மீதான விசாரணை ஒழுங்கு முறை, கைது உத்தரவின் மூலம் அல்லாமல், அரசுத் தலைவரின் தகுநிலைக்கு ஏற்ப அமைய வேண்டும். அதோடு, அரசுவாரியங்களுக்கிடையில் ரத்தம் சிந்தும் நிகழ்வு நடக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.