சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன், 48ஆவது உலகத் திறன்கள் போட்டிக்கான போட்டியின் சீனப் பிரதிநிதிக் குழு அண்மையில் நிறுவப்பட்டது. ஆகஸ்ட் 23ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 220 உறுப்பினர்கள் கொண்ட இப்பிரதிநிதிக் குழுவில், சராசரியாக 21 வயதிலான 71 இளைஞர்கள், 64 பிரிவுகளின் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
48ஆவது உலகத் திறன்கள் போட்டி இவ்வாண்டின் செப்டம்பர் 22 முதல் 27ஆம் நாள் வரை, ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. மதிப்பீட்டின்படி 70 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1400 பேர் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
