தேசிய நெடுஞ்சாலை 19 இல் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மூன்று முதல் நான்கு நாட்களாக சிக்கித் தவிக்கின்றனர்.
பீகாரில் உள்ள சசாரம் மற்றும் ரோஹ்தாஸ் அருகே சுமார் 15 முதல் 20 கி.மீ நீளம் கொண்ட இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிவசாகர் அருகே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்ட சாலை விரிவாக்க பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் பெய்த கனமழையால் நிலைமை மோசமடைந்து, ஆறு வழி கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட மாற்றுப்பாதைகள் மற்றும் சேவைப் பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்; 4 நாட்களாக தேங்கி நிற்கும் வாகனங்கள்
