“வெளிநாடுகளின் தடைக்கான எதிர்ப்பு பற்றிய சீன மக்கள் குடியரசின் சட்டத்தின்”படி, அமெரிக்காவின் ராணுவ தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உயர் நிலை நிர்வாகப் பணியாளர்களின் மீது எதிர் நடவடிக்கை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் டிசம்பர் 5ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தைவான் விவகாரம், சீனாவின் மைய நலன்களில் மிக முக்கிய பகுதியாகும். சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு ஆயுதங்களை விற்பதாக அமெரிக்கா அண்மையில் பல முறை அறிவித்தது.
ஒரே சீனா என்ற கோட்பாட்டையும், மூன்று சீன-அமெரிக்கக் கூட்டு அறிக்கைகளையும் இது கடுமையாக மீறி, சீனாவின் உள் விவகாரத்தில் கடுமையாக தலையிட்டு, சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தொடர்புடைய சட்டத்தின்படி, அமெரிக்காவின் ராணுவ தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் உயர் நிலை நிர்வாகப் பணியாளர்களின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது என்றார்.
மேலும், அமெரிக்கத் தரப்பு ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் மூன்று சீன-அமெரிக்கக் கூட்டு அறிக்கைகளைப் பின்பற்றி, தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்காது என்ற அமெரிக்கத் தலைவரின் வாக்குறுதியை நிறைவேற்றி, தைவானுக்கு ஆயுதங்களை விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.