விரைவான உயர்வான உறுதியான ரோபோ வளர்ச்சி

Estimated read time 1 min read

ஆகஸ்ட் 22 முதல் 26 வரை பெய்ஜிங்கில் நடைபெற்ற இரண்டாம் உலக மனித வடிவ ரோபோ விளையாட்டுப் போட்டியில் அமெரிக்காவின் அசோசியேட்டட் பிரஸ், ஜப்பானின் ஆசாஹி செய்தித்தாள் வலைத்தளம், ஸ்பெயினின் எல் பாயிஸ் வலைத்தளம் போன்ற பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தி நேர்மறையான மதிப்பீடுகளை வழங்கியுள்ளன.

இந்த விளையாட்டுப் போட்டி, ரோபோ தொழில்துறையின் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் ஒரு முக்கியமான ஜன்னலாகவும் திகழ்கின்றது.

இப்போட்டியில் சீனா தயாரித்த ரோபோக்கள் சிறப்பாக செயல்பட்டன. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனையை முறியடித்தல் முதல், மருத்துவமனை காட்சி இடத்தில் சுயமாகவும் சுமூகமாகவும் பொருட்களை ஏற்றி அனுப்பி, நோயாளிகளுக்கு நுண்ணியமாக வழிகாட்டுதல் வரை, பல்வகை கடமைகளை அவை நிறைவேற்றின.

தரவுகளின்படி, சீனா சுயமாகத் தயாரித்த பல்வகை தொழிற்துறை ரோபோக்கள் ஏற்கனவே 253 தொழில் துறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாண்டின் முற்பாதியில், சீனா 40 ஆயிரம் மனித உருவ ரோபோக்களைத் தயாரித்துள்ளது. இது உலகளவில் 97 விழுக்காடு பங்கு வகிக்கின்றது. முதல் காலாண்டில் சீனா ஏற்றுமதி செய்த மனித ரோபோக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 210 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப ஆண்டுகளில், சீனா உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு, உலக ரோபோ மாநாடு, உலக மனித வடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடர்ச்சியான சர்வதேச மாபெரும் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், உலகளாவிய தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உற்பத்தி-தேவை இணைப்புக்கான பாலங்களை அமைத்து, தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாட்டை விரைவுபடுத்தி வருகிறது. அதே நேரத்தில், சீனா திறந்த மூல மற்றும் திறந்த தன்மையைப் பெரிதும் ஊக்குவித்து, திறந்த மூலநிரலை வழங்கும் குறைந்த செலவிலான பெரிய மாதிரிகளை உலகிற்கு முனைப்புடன் வழங்கி வருகிறது.

உண்மையில், சீனாவின் தொழில்நுட்பப் புதுமையின் அடிப்படை நோக்கம், தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை ஒவ்வொரு தனி மனிதனையும் அனுபவிக்க வைப்பதாகும்.

You May Also Like

More From Author