சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் துங்லுனுக்கு செய்தி அனுப்பி, லாவோஸ் அரசுத் தலைவராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீனாவும் லாவோஸும் இன்பத் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட சோஷலிச கூட்டாளிகளாக திகழ்கின்றன. முக்கிய நலன் மற்றும் அக்கறைக் கொண்ட பிரச்சினைகள் குறித்து இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளித்து வருகின்றன
சீன-லாவோஸ் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 65ஆவது நிறைவு ஆண்டாகவும் சீன-லாவோஸ் நட்பு ஆண்டாகவும் 2026ஆம் ஆண்டு உள்ளது. துங்லுனுடன் இணைந்து, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பின் புதிய திட்டத்தை வகுத்து, சீன-லாவோஸ் பொது சமூக கட்டுமானத்தை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை படைக்க விரும்புகிறேன் என்றார்.
