2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கிர்கிஸ்தானில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் கிஸ்கிஸ்தானில் ஒளிபரப்பபடுகின்றது.
இந்நிகழ்வின் துவக்க விழாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென்ஹைசியோங் காணொலி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், அரசு சாரா நட்பை முன்னேற்றுவது தொடர்பான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிந்தனையின் ஈர்ப்பாற்றலை கிர்கிஸ்தான் ரசிகர்கள் உணர்வு கொண்டு, நீண்டகாலமான புத்துயிருடைய சீனப் பண்பாடுகளை அறிந்து கொள்வது தான், சீன ஊடகக் குழுமம், கிர்கிஸ்தான் செய்தி ஊடகத்துடன் இந்நிகழ்வை நடத்துவதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
