நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை – முதலமைச்சர் விஜய்

Estimated read time 0 min read

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல்  போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் தனது எக்்் தளத்தில், “நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல்  போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்  குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author