# பீகாரில் வெள்ள அபாய எச்சரிக்கை

Estimated read time 0 min read

நேபாளம் கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை அடுத்து உ.பி., பீகாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, பனி ஏரி  உடைந்து நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை அடுத்து உத்தரப்பிரதேசம், பீகாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேபாளம் வெள்ளப் பெருக்கின் காரணமாக, பீகார் மாநிலத்துக்கும் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சூழ்நிலைகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் இன்னும் 2 மணி நேரத்டில் பீகாரை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டற்று வெள்ளம் பீகாரின் வால்மீகி நகரை இன்னும் 3 மணிநேரத்தில் தாக்கும் என அஞ்சப்படுகிறது. கண்டக் ஆற்றங்கரையோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்பு நிலையைச் சமாளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author