பாரிஸ் ஒலிம்பிக்கில் சீன விளையாட்டு வீரர்களின் சாதனைகள் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளன
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 11ஆம் நாள் நிறைவடைந்தது. சீன விளையாட்டு வீரர்கள் குழு நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 40 தங்கப் பதக்கங்களையும், 27 வெள்ளி பதக்கங்களையும் 24 வெண்கலப் பதக்கங்களையும் வென்று, வெளிநாடுகளில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வரலாறு காணாத சிறந்த பதிவாகியுள்ளது. சீனத் தேச விளையாட்டு எழுச்சி மற்றும் ஒலிம்பிக் எழுச்சியை இது நன்றாக வெளிப்படுத்தி, தற்கால சீனாவின் அழகுமிக்க அடையாளமாக மாறி, உலகளவில் அதிக விசிறிகளை ஈர்த்துள்ளது.
பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோன் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்பு பேட்டியளித்த போது, மேசை பந்தாட்டம், நீச்சல் உள்ளிட்ட பல போட்டிகளில் சீன விளையாட்டு வீரர்கள் பெற்ற சாதனைகள், தலைசிறந்த விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவிக்கும் ஆற்றல் சீனாவுக்கு உண்டு என்பதை கோடிட்டுக்காட்டுகின்றன என்றும், அவை ஊக்கமளிக்கின்றன என்றும் தெரிவித்தார்.
உலகில் மிக உயர் நிலையுடைய விளையாட்டு போட்டி மேடையாக, போட்டியை ஒரேயொரு தலைப்பு சொல்லாக ஒலிம்பிக் கொள்ளவில்லை. ஒற்றுமை மற்றும் நட்புறவின் சின்னமாகவும், நாகரிங்களுக்கிடையேயான பரிமாற்றத்தின் விளைவாகவும் இருந்து, அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றின் மீதான மனித குலத்தின் அருமையான எதிர்பார்ப்பை இது கொண்டுள்ளது.
உலகைப் பொறுத்த வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை அறிந்து கொள்வதற்கான ஜன்னலாகும். 1984ஆம் ஆண்டு சீன விளையாட்டு வீரர்கள் குழு முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது. 2024ஆம் ஆண்டு சீன விளையாட்டு வீரர்கள் குழு இதர நாட்டின் குழுவுடன் தங்கப் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் வகித்தது. கடந்த 40 ஆண்டுகளில், சீனாவின் விளையாட்டின் முன்னேற்றம், சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றலின் மேம்பாடு, ஒலிம்பிக் விளையாட்டின் வளர்ச்சிக்காக சீனா ஆற்றியுள்ள பங்கு ஆகியவற்றின் சாட்சியாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி விளங்குகிறது.