சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 27ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, தொழில் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலைத் திங்கள் வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் வருமானம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.5 விழுக்காடு அதிகரித்துள்ளதோடு, அவற்றின் இலாபம், 17.6 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் மேல் வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் வருமானத்தில் இலாப விகிதம், 5.66 விழுக்காட்டை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.54 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, 2023ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலத்தில் காணப்பட்ட மிக உயர்ந்த பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
