சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிக்காச்செ நகரின் ஜிர்லுங் மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இப்பேரழிவுக்குப் பின், பல தரப்பு மீட்புதவிக் குழுக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்புடைய புள்ளிவிரங்களின்படி, 27ஆம் நாள் காலை 8 மணி வரை, 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 விவசாயிகள் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 558 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களுள் 260 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
27ஆம் நாள் விடியற்காலையில், சீன அவசர நிலை மேலாண்மை அமைச்சகமும், சீனத் தேசியத் தீயணைப்பு வாரியமும், சீன மீட்புதவிக் குழுவினைச் சேர்ந்த 111 தீ அணைப்பு வீரர்களைப் பேரிடர் நிகழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பியுள்ளன.
27ஆம் நாள் காலை 8:20க்கு, சிட்சாங்கிலுள்ள இராணுவப் பிரிவு 2 ஹெலிகாப்டர்களை அனுப்பி, பேரிடர் நிகழ்ந்த பகுதிக்குச் சென்று பேரிடர் நிலைமை மற்றும் மீட்புதவி வரைவுப் பணித்திட்டத்தை வகுப்பது உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளன.
