சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் வினாத் தாள் மூலம் உலகின் 38 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 257 மக்களிடம் மேற்கொண்ட ஆய்வின் படி, “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” கொள்கை, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் உறவைக் கடுமையாகப் பாதித்து வருகின்றது. அதோடு, அமெரிக்கா மீதான அதன் பாரம்பரிய கூட்டணி நாடுகளின் நம்பிக்கையும் தீவிரமாக வீழ்ச்சி அடைந்து வருகின்றது.
அமெரிக்காவின் வர்த்தக தடைகள் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக விசாரணைக்குள்ளாக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 53.8 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். சர்வதேசப் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளைப் பயன்படுத்தி மற்ற நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதார நிர்பந்தம் செய்வதை 78.8 விழுக்காட்டினர் விமர்சித்துள்ளனர்.
தங்கள் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவின் வளர்ச்சி குறித்து அமெரிக்கா நீங்கலாக ஜி 7 நாடுகள் குழு அமைப்பில் இருக்கும் 6 நாடுளைச் சேர்ந்த 57 விழுக்காட்டினர் நம்பிக்கயற்ற மனநிலையைக் கொண்டிருக்கின்றனர்.