சி.எம்.ஜி தயாரித்த சிறப்பு நிகழ்ச்சி எகிப்தில் ஒளிபரப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, உள்ளூர் நேரப்படி, செப்டம்பர் முதல் நாள், சீன ஊடக குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் என்னும் நிகழ்ச்சியின் அரபு மொழிப் பதிப்புக்கான துவக்க விழா, எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவுக்கு எகிப்து அரசுத் தலைவர் அப்தல் ஃபாடாஹ் அல் சிசி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங், எகிப்து செய்தி துறை அமைச்சர், அரபு நாடுகள் லீக்கின் செயலாளர் அலுவலகத்தின் தூதர் உள்ளிட்ட விருந்தினர்கள் இதில் உரைநிகழ்த்தினர்.

ஷென் ஹைய்சியோங் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், எகிப்து அரசுத் தலைவர் அப்தல் ஃபாடாஹ் அல் சிசி ஆகிய இருவரின் நெடுநோக்கு வழிகாட்டலில். சீன-எகிப்து பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு தொடர்ந்து புதிய நிலைக்கு முன்னேறி வருகிறது. எகிப்தின் பல்வேறு துறைகளின் நண்பர்களுடன் இணைந்து, புதிய யுகத்தில் சீன-எகிப்து பொது சமூகத்தின் கட்டுமானத்திற்கு புதிய அத்தியாயம் திறந்து வைக்க சீன ஊடக குழுமம் விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author