ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஈரான் நிலைமை பற்றிய அறிக்கையை மார்ச் 2ஆம் நாள் வெளியிட்டது.
இவ்வறிக்கையில், ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. பேச்சுவார்த்தை நடத்துவது, ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பது, பல்வேறு தரப்புகளின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைச் சமநிலைப்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய மோதல்களைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாடு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, நிலைமை மேலும் மோசமாவதை தடுக்க வேண்டும் என்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் இவ்வறிக்கையில் வலியுறுத்தின.
