14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டம் ஒன்று 9ஆம் நாள் மாலை நடைபெற்றது. இதில், பொதுத்துறை அமைச்சகம், மனித வளம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம், உறைவிடம் மற்றும் நகர-கிராம வளர்ச்சி அமைச்சகம், தேசிய சுகாதார மற்றும் ஆரோக்கிய ஆணையம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பொதுத்துறை அமைச்சர் லு ச்சியுன் கூறுகையில்,
பொதுத்துறை பணி, பொது மக்கள் வாழ்க்கை தேவையின் மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். முதலில், குறிப்பிட்ட மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பதிலிருந்து, மேலதிக உதவிகளை தேவையான மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பதை வளர்க்க வேண்டும். இரண்டாவது, சேவை பணி, பொருட்கள் உதவியிலிருந்து, சமூக சேவைக்கும் மன நல ஆதரவுக்கும் மாற்ற வேண்டும். மூன்றாவது, உத்தரவாத பணி அரசிடமிருந்து, பல்வேறு சமூக அமைப்புகளுக்கு மாற்ற வேண்டும். நான்காவது, சேவை புரியும் வழிமுறை, பாரம்பரிய வழிமுறையிலிருந்து, எண்ணியல் மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிமுறைக்கு மாற்ற வேண்டும் என்றார்.