புதினைச் சந்தித்த டிங் சுயேசியாங்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், அரசவையின் துணைத் தலைமையமைச்சருமான டிங் சுயேசியாங், செப்டம்பர் 2 முதல் 4ஆம் நாள் வரை, ரஷியாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் விளாடிவோஸ்டாகில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். அவர், ரஷியாவின் முதல் துணைத் தலைமையமைச்சர் டெனிஸ் மன்டுரோவுடன் கூட்டாக சீன-ரஷிய முதலீட்டு ஒத்துழைப்பு ஆணையத்தின் 13ஆவது கூட்டத்துக்கும், ரஷிய துணைத் தலைமையமைச்சர் நோவகுடன் கூட்டாக சீன-ரஷிய எரியாற்றல் ஒத்துழைப்பு ஆணையத்தின் 23ஆம் கூட்டத்துக்கும் தலைமைத் தாங்கி, 8ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிகக் கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.

புதினைச் சந்தித்த போது டிங் சுயேசியாங் கூறுகையில், சீனா ரஷியாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய பொது கருத்துக்களைச் செவ்வனே செயல்படுத்தி, பயனுள்ள முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு தரப்பின் நலன்களின் ஒருங்கிணைப்பை ஆழமாக்கி, சீன-ரஷிய உறவின் மேலும் தரமிக்க வளர்ச்சிக்கான அடிப்படையை இடைவிடாமல் உறுதிப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

புதின் கூறுகையில், டிங் சுயேசியாங் ரஷியாவில் 11ஆவது கிழக்குப் பொருளாதாரக் கருத்தரங்கில் கலந்து கொள்வதை வரவேற்கிறேன். இரு நாட்டின் கூட்டு முயற்சியுடன் சீன-ரஷிய உறவு முன் கண்டிராத நிலையை எட்டியுள்ளது. ரஷியா, சீனாவுடன் இணைந்து, நெடுநோக்கு வாய்ந்த இசையான செயல்பாட்டை வலுப்படுத்தி, இரு நாட்டுறவை மேலும் முன்னேற்ற விரும்புவதாகவும் புதின் தெரிவித்தார்.

You May Also Like

More From Author