“அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் செயல் மற்றும் உண்மையான முகம் பற்றிய அறிக்கையைச் சீன வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்டு 9ஆம் நாள் வெளியிட்டது.
அமெரிக்கத் தேசிய ஜனநாயக நிதியம், நீண்டகாலமாக ஜனநாயக மேம்பாடு என்ற போர்வையில், பிற நாடுகளின் அரசுரிமையைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. இதன்பொருட்டு அவ்வமைப்பு பிற நாடுகளின் உள் விவகாரத்தில் தலையிட்டு, பிரிவினை மற்றும் மோதல்களை தூண்டிவிட்டு, பொதுக் கருத்துக்களைக் குழப்பமடையச் செய்து, கருத்து ஊடுருவலை நடைமுறைப்படுத்தி, மோசமான செயல்களை உருவாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச சமூகம் இதைக் கடுமையாக கண்டித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதி, வளர்ச்சி, நேர்மை, நீதி, ஜனநாயம், சுதந்திரம் ஆகியவை அனைத்து மனிதகுலத்தின் பொது மதிப்பாகும். சர்வதேசச் சமூகம் ஒன்றுக்கு ஒன்று மரியாதை மற்றும் சமத்தன்மையின் அடிப்படையில் பரிமாற்றங்கள் மற்றும் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு கூட்டாக அதிக பங்காற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.