ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து!

Estimated read time 1 min read

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-…

இன்று சூரிய உதயத்திற்கு முன்பாக, இஸ்ரோவால் ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ.ஓ.எஸ்.-5 வெற்றிகரமாக ஏவப்பட்டது நாட்டின் விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும். இந்த சாதனை நமது தேசத்தின் பாதுகாப்பையும், கண்காணிப்புக்கான நமது திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்த அர்ப்பணிப்பு மிக்க இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வையால் விண்வெளித்துறையில் தேசத்தின் புதிய முயற்சிகள், நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றம், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தி உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author