ஆஹா என்ன ருசி…கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த மாதிரி வெண்ணெய் செஞ்சு பாருங்க!

Estimated read time 0 min read

சென்னை : கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது வீடெங்கும் பதியும் குட்டிப் பாதங்களும், கண்ணனுக்குப் பிடித்த அந்த நாவில் கரையும் வெண்ணெயும் தான். பொதுவாக, வெண்ணெய் எடுக்க வேண்டும் என்றால் பாலாடையைச் சேர்த்து வைத்து, உறை ஊற்றி, மத்து கொண்டு மணிக்கணக்காகக் கடைய வேண்டும் என்பதுதான் நமக்குத் தெரிந்த கணக்கு.

ஆனால், வரவிருக்கும் கிருஷ்ண ஜெயந்திக்கு ஒரு மேஜிக் போல, வெறும் ஐந்தே நிமிடங்களில், சமையலறையில் இருக்கும் கொஞ்சூண்டு நெய்யை வைத்தே அசல் வெண்ணெயைத் தயாரித்து விடலாம் என்றால் நம்ப முடிகிறதா? விதவிதமான பலகாரங்களையும் 56 வகையான இனிப்புகளையும் பார்த்துப் பார்த்துச் செய்து வைத்தாலும், நம் வீட்டு கிருஷ்ணருக்கு எப்பொழுதுமே கொள்ளை பிரியம் இந்த வெள்ளந்தி வெண்ணெய் மீதுதான். கடைகளில் இரசாயனங்கள் கலந்து விற்கப்படும் வெண்ணெயைத் தவிர்த்து, இந்த முறை உங்கள் கைகளாலேயே ஒரு மாயாஜாலம் செய்து இந்த விசேஷ நெய்வேத்தியத்தை ரெடி பண்ணி அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் நீங்கள் எடுத்து வைத்துள்ள நெய்யைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதனுடன் சில ஐஸ் கட்டிகளையும் உள்ளே போடுங்கள். அடுத்தாக உங்கள் கைகளை நன்றாகத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்த நெய்யையும் ஐஸ் கட்டிகளையும் சேர்த்து வட்ட வடிவில் கைவிடாமல் நன்றாகக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.உங்கள் கைகளின் மிதமான வெப்பமும், ஐஸ் கட்டிகளின் தீவிர குளிர்ச்சியும் நெய்யில் ஒன்றாக இணையும் போது, அங்கே ஒரு ஆச்சரியம் நிகழும்.

நீங்கள் கலக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே திரவ நிலையில் இருந்த நெய், மெல்ல மெல்ல நிறம் மாறி வெளிறிய மஞ்சள் நிறத்திற்கு வர ஆரம்பிக்கும். சரியாக ஐந்து நிமிடங்களை எட்டும் போது, அந்த நெய் அப்படியே பஞ்சு போல உப்பி, உலகிலேயே மிக மென்மையான, நாவில் கரையும் அசல் வெண்ணெயாக மாறி உங்கள் கைகளில் சூப்பராகத் திரண்டு வந்துவிடும்.

தண்ணீரைப் பிழிந்துவிட்டு அந்த வெண்ணெயை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.இப்படித் தயாரான வெண்ணெயுடன் நீங்கள் கற்கண்டையும் குங்குமப்பூவையும் நேரடியாக உள்ளே சேர்த்துக் கலந்து கொள்ளலாம். அல்லது, கண்ணனுக்குப் படைக்கும் போது பார்க்கவே தெய்வீக அழகோடு இருக்க, அதன் மேலே கொஞ்சமாக நட்ஸ், குங்குமப்பூ இதழ்கள் மற்றும் சர்க்கரையைத் தூவி, வண்ணமயமாக டாப்பிங்ஸ் செய்து அலங்கரிக்கலாம்.

பூஜை அறையில் கிருஷ்ணருக்கு இந்த சுவையான வெண்ணெயை நெய்வேத்தியம் செய்து முடித்த பிறகு, இதனை நன்கு கனிந்த வாழைப்பழத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவது ஒரு சுவை கொடுக்கும். நாவில் கரையும் அந்த வெண்ணெயின் நயமும், வாழைப்பழத்தின் இயற்கை இனிப்பும் சேரும் போது அதன் ருசி உங்களை அப்படியே சொக்க வைக்கும். இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்களும் உங்கள் இல்லத்தில் இந்த எளிய, ஆச்சரியமான வெண்ணெய் நெய்வேத்தியத்தை நிச்சயம் ட்ரை பண்ணிப் பாருங்கள்.

You May Also Like

More From Author