‘நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிடக் கூடாது’: சட்டப்பேரவையில் உதயநிதிக்கு முதலமைச்சர் விஜய் பதில்  

Estimated read time 0 min read

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தவெக அரசு அமைந்த 116 நாட்களில் புதிய திட்டங்களை கொண்டு வராமல் திமுக அரசின் திட்டங்களை ரத்து செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது. திமுக ஆட்சியில் டாப் கியரில் சென்ற தமிழ்நாடு, தற்போது ரிவர்ஸ் கியரில் செல்கிறது” எனக் கடுமையாகச் சாடினார்.
மேலும் கோவையில் ஒரே மாதத்தில் 9 கொலைகள் மற்றும் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக கூறி சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author