காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில், அடுத்தடுத்த நாட்களில் இரு மாணவர்கள் கட்டிட மாடிகளில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்களால் அச்சமடைந்த கல்லூரி நிர்வாகம், மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இச்சம்பவங்கள் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தத் தொடர் அசம்பாவிதங்கள் பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி: மாணவி உயிரிழப்பு, மாணவர் தற்கொலை முயற்சி; கல்லூரிக்கு விடுமுறை
