அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல் போர்க்கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்து ஈரானியப் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) விண்வெளிப் பிரிவு பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானியக் கப்பல்களுக்கு இடையூறு விளைவித்து, கடல்வழி முற்றுகையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சேதமடைந்து அப்பகுதியை விட்டு வெளியேறியதாகவும் ஈரான் அரசு ஊடகம் உரிமை கோரியுள்ளது.
மீண்டும் வெடித்தது கடல் போர்! அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரானிய ஏவுகணை வீச்சு; அமெரிக்கா பதிலடி எச்சரிக்கை
