செர்பிய அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி

Estimated read time 1 min read

செர்பிய அரசுத் தலைவர் வுச்சிச் மே 24ஆம் நாள் மாலை பெய்ஜிங்கை வந்தடைந்து சீனாவில் 5 நாட்கள் நீடித்த அரசு முறைப் பயணத்தைத் துவங்கினார். 2017ஆம் ஆண்டு செர்பிய அரசுத் தலைவராகப் பதவியேற்றதையடுத்து, அவர் மேற்கொண்ட முதலாவது சீன அரசு முறைப் பயணம் இதுவாகும். பயணத்தின் போது அவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.

பேட்டியில் வுச்சிச் கூறுகையில், சீனப் பயணம் தன் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான பயணமாகத் திகழ்கிறது. நட்பு விருது அளித்த சீனாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த கௌரவம் தனக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். தனிநபரின் மகிழ்ச்சியை அளிப்பதோடு, எதிர்காலத்தின் பொறுப்புகளையும் இது பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. செர்பிய-சீன நட்பு லட்சியத்துக்குத் தொடர்ந்து பங்காற்ற நான் விரும்புகிறேன். சீனத் தரப்புடன் இணைந்து, புதிய யுகத்தில் செர்பிய-சீன பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றப் பாடுபடுகிறேன். செர்பிய-சீன பொது எதிர்கால சமூகத்தைப் புதிய கட்டத்திற்குக் கொண்டு செல்வதை முன்னேற்றவும், இரு நாடுகளின் பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிலைகளிலுமான ஒத்துழைப்பை ஆழமாக்கவும், இந்த முக்கியமான கடமை தான் தொடர்ந்து முயற்சி செய்வதற்கு ஊக்கமளித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author