மண்சரிவால் பாதிக்கப்பட்ட கிர்லோங்க பகுதியின் நிலைமை பற்றிய தகவலை தொடர்ந்து காலதாமதமின்றி வெளியிடும் சீனா

சீன வெளியுறவு அமைச்சகம் செப்டம்பர் 7ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங், வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிர்லோங்கில் மண்சரிவின் பாதிப்பு குறித்து செய்திகளை வெளியிடும் நிலைமை பற்றி விவரித்தார்.

அவர் கூறுகையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சாலைகளில் போக்குவரத்து இயல்புக்கு வந்துள்ளன. 8 வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள் சீனாவின் அழைப்பின் பேரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மையப் பகுதிக்குச் சென்று, மீட்புதவிப் பணி பற்றிய செய்திகளைச் சேகரித்து, சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நடத்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். மீட்புப் பணியில் சீனா தொடர்ந்து முழு மூச்சுடன் செயல்படுத்தி, தொடர்புடைய நிலைமை மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் நிலவரங்களை தொடர்ந்து காலதாமதமின்றி வெளியிடும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author