சேவை வர்த்தகத்துக்கான சீன சர்வதேசப் பொருட்காட்சி உலகச் சந்தைக்கு நம்பிக்கை

சேவை வர்த்தகத்துக்கான 2026ஆம் ஆண்டு சீன சர்வதேசப் பொருட்காட்சி 9ஆம் நாள் துவங்கும். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளாவிய இணையப் பயன்பாட்டாளர்களின் மீது மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, இப்பொருட்காட்சி, சீன சேவை வர்த்தகம் உயர் நிலையுடன் வெளிநாட்டுத் திறப்பை மேற்கொள்வதை முன்னேற்றும் முக்கிய மேடையாக மாறியுள்ளது என்று 89.6 விழுக்காட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இப்பொருட்காட்சியில் முதல்முறையாக “சீன சேவை” என்ற காட்சியிடத்தை நிறுவியது. எண்ணியல் சேவை, பண்பாட்டுச் சேவை, நவீன சரக்குப் போக்குவரத்து முதலிய துறைகளிலான புதிய சாதனைகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை, சேவை வர்த்தகப் பொருட்காட்சி உலகளவில் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 14.7 இலட்சம் கண்காட்சியாளர்களை ஈர்த்துள்ளது. சேவை வர்த்தகப் பொருட்காட்சியை சீனா தொடர்ச்சியாக நடத்துவது, உயர் நிலையுடன் வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கும் நம்பிக்கையை எடுத்துக்காட்டியுள்ளது என்று 87.6 விழுக்காட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.

You May Also Like

More From Author