சீன-கத்தார் உறவுக்கு சீனா முக்கியத்துவம்:வாங்யீ

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 8ஆம் நாள் பெய்ஜிங்கில் கத்தார் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகாமதுவைச் சந்தித்து பேசினார்.

அப்போது, கத்தாருடனான உறவு சீனாவின் மத்திய கிழக்குத் தூதாண்மையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறிய வாங்யீ, சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் கத்தாருடனான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுபடுத்த சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய நிலைமை சிக்கலாகவும் அதிகக் கவனம் உடையதாகவும் உள்ளது என்று முகாமது கூறினார்.

அரசுத்தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய முன்மொழிவுகளுக்கு கத்தார் ஆதரவு தெரிவித்து, ஐ.நா கட்டுக்கோப்புக்குள் ஒருங்கிணைப்பை வலுபடுத்தி, உலக அமைதி மற்றும் கூட்டு மேம்பாட்டை நாட விரும்புவதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மத்திய கிழக்கின் வளைகுடா பிரதேசத்தின் நிலைமை குறித்து இருவர் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறி கொண்டனர்.

You May Also Like

More From Author