2026க்கான முதலாவது மத்திய ஆவணத்தைச் செயல்படுத்த சீனா ஏற்பாடுகள்

2026ஆம் ஆண்டிற்கான முதலாவது மத்திய ஆவணத்தின் குறிக்கோளைச் செயல்படுத்தி, வேளாண்துறை மற்றும் கிராமப்புறத்தின் நவீனமயமாக்கத்தையும் பன்முக கிராமப்புற மறுமலர்ச்சியையும் இலக்காக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் விதம், சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஆவணம் ஒன்றில், 8 துறைகளிலான பணிகளை ஏற்பாடு செய்துள்ளது.

முதலாவதாக, ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை உயர்த்தி முதன்மை வேளாண் பொருட்களின் நிலையான மற்றும் பாதுகாப்பான வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, வழக்கமான மற்றும் துல்லியமான ஆதரவு நடவடிக்கையை மேற்கொண்டு வறுமை ஒழிப்புப் பணியின் சாதனையைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சாதன ரீதியான ஆதரவை வலுப்படுத்தி வேளாண்துறையில் புதிய தர உற்பத்தித் திறனின் வளர்ச்சியை வழிநடத்த வேண்டும். நான்காவதாக, வேளாண்துறையின் பன்முக பசுமை மாற்றத்தை முன்னேற்றி தொடரவல்ல வளர்ச்சித் திறனை நிலையாக உயர்த்த வேண்டும். ஐந்தாவதாக, விவசாயிகளுக்குச் செல்லமடையச் செய்யும் தொழில்களை வளர்த்து விவசாயிகளின் வருமான அதிகரிப்பை ஊக்குவிக்க வேண்டும். ஆறாவதாக, கிராமப்புறத்தில் நவீன வாழ்க்கை நிலையை ஏற்படுத்தி உள்ளூர் நிலைமைக்கிணங்க வாழ்க்கை மற்றும் தொழிலுக்கு உகந்த இணக்கமான கிராமப்புறக் கட்டுமானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏழாவதாக, கிராமப்புறச் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்கி வேளாண்துறை மற்றும் கிராமப்புறத்தின் வளர்ச்சி ஆற்றலை தூண்ட வேண்டும். எட்டாவதாக, பல்வேறு பணிகள் நடைமுறையில் பயனளிக்கச் செய்யும் வகையில் அடிப்படை உற்பத்திக் கூறுகளின் ஆதரவு மற்றும் உத்தரவாத்த்தை வலுப்படுத்த வேண்டும் என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author