கேரளாவின் மிரட்டலான ப்ரீமியம் பஸ் சர்வீஸ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!! 

Estimated read time 1 min read

கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இடையே இயக்கப்படும் அதிநவீனப் பேருந்து ஒன்று, விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் பயணிகளை ஈர்த்து வருகிறது. சாலைப் பயணங்களை மிகவும் சொகுசாக மாற்றும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ப்ரீமியம் பேருந்தின் உட்புறக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

விமானங்களின் பிசினஸ் கிளாஸ் இருக்கைகளைப் போன்றே வசதியான தோல் இருக்கைகள், தனிப்பட்ட என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன், இலவச வைஃபை மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய போர்ட்டுகள் என இந்தப் பேருந்து பல அதிநவீன வசதிகளுடன் பயணிகளை அசத்துகிறது. நீண்ட தூரப் பயணங்களைச் சோர்வில்லாமல் கழிக்க இந்த வசதிகள் பயணிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன.

இதுமட்டுமின்றி, பயணிகளின் வசதிக்காகப் பேருந்து உள்ளேயே ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பயணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுடன், சூடான பானங்கள் மற்றும் சுவையான ஷவர்மா ரோல் போன்ற சிற்றுண்டிகளையும் வழங்கி விமானப் பயண அனுபவத்தை நுகரச் செய்கிறார்.

“>

சுமார் 200 கி.மீ தூரப் பயணத்தைக் கருத்தில்கொண்டு, பேருந்தின் உள்ளேயே தூய்மையான கழிவறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு இவ்வளவு பிரம்மாண்டமான மற்றும் வசதியான சேவையை அறிமுகப்படுத்தியுள்ள கேரள அரசின் இந்த முயற்சிக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

You May Also Like

More From Author