2026 உலகளாவிய சேவைகள் வர்த்தக உச்சிமாநாடு 9ஆம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் துணைத் தலைமையமைச்சர் டிங் சுயெசியாங் இதில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.
அவர் கூறுகையில்,
உலகப் பொருளாதார அதிகரிப்பையும் தொழில் துறையின் மேம்பாட்டையும் விரைவுபடுத்துவதில் சேவை வர்த்தகத்தின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. சேவை வர்த்தக வளர்ச்சியையும் திறப்பையும் சீனா ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருவதன் மூலம், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மேலதிகமான புதிய வளர்ச்சி வாய்ப்புக்களைக் கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதே நாள் பிற்பகல், ஜிம்பாப்வே துணை அரசுத் தலைவர் சிவெங்கா, பல்கேரியா துணைத் தலைமையமைச்சர் பிளேவ் ஆகியோருடன், டிங் சுயெசியாங் சந்திப்பு நடத்தினார். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவை தொடர்ந்து ஆழமாக்கி, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று, கையோடு கை கோர்த்து நவீனமயமாக்கத்தை விரைவபடுத்த சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
