சீனாவின் லீ இன நெசவு நுட்பம், ட்சியங் புத்தாண்டுத் திருவிழா மற்றும் பாரம்பரிய சீன மர வளைவுப் பாலங்கள் ஆகியவை, அவசரமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்டதன் முதல் இதுவரை, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. டிசம்பர் 5ஆம் நாள், யுனெஸ்கோவின் உலக மரபுச் செல்வக் கமிட்டியின் பரிசீலனையின் மூலம், இந்த 3 மரபு செல்வங்கள், மனித குலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பிரதிநிதித்துவப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
இதுவரை, சீனாவின் 44 அம்சங்கள், யுனெஸ்கோவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலகத்தின் முதலிடம் வகிக்கிறது.
பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு பற்றிய சீனாவின் நடைமுறை சாதனைகளை இது வெளிப்படுத்தியுள்ளதோடு, சீனப் பண்பாட்டின் செல்வாக்கையும் உயர்த்தியுள்ளது.