சீனா, தனது முதல் கட்ட 6ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை நிறைவேற்றியது. இக்கட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட முக்கியத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன என்று தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெய்ஜிங்கில் தெரிவித்தது.
இத்துறையின் துணை அமைச்சர் Zhang Yunming கூறுகையில், அறிவியல்-தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் தொழில்துறைப் புத்தாக்கம் இடையேயான ஆழமான ஒருங்கிணைப்பை முன்னேற்ற தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்றும் தொழில்துறைப் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கை மேலும் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முதற்கட்ட 6ஜி தொழில்நுட்ப சோதனைகளின்போது, 300-க்கும் மேற்பட்ட முக்கியத் தொழில்நுட்பங்களைச் சீனா கொண்டிருந்தது. தேசியப் பொருளாதாரத்தின் 97 முக்கியப் வகைகளில் உள்ள 91 வகைகளில் 5ஜி மற்றும் ஜிகாபைட் நெட்வொர்க்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், தொழில்துறை இணையமானது, 41 முக்கியத் தொழில்துறை வகைகளை முழுமையாக உள்ளடக்கி, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் அதிக உயிர்ச்சக்தியை செலுத்தியுள்ளது என்றார்.
இந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Xie Cun கூறுகையில், உலகின் மிகப் பெரிய தகவல் உள்கட்டமைப்பை சீனா நிறுவியுள்ளது. சுமார் 4.84 மில்லியன் 5ஜி அடிப்படை நிலையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன, 5ஜியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.2 பில்லியனைத் தாண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.
