சீன-பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் கருத்தரங்கு நடைபெற்றது

சீன-பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் கருத்தரங்கும் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் கலந்தாய்வு அமைப்பு முறை கூட்டமும் 24ஆம் நாள் பெய்ஜங்கில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் 12 முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிந்தனை கிடங்கு, செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும், சீனாவின் அமைச்சகங்கள், தொழில் நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் அறிஞர்களின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை அமைச்சர் லியூ ஹாய்சிங் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் பாகிஸ்தான் தலைவர்களின் உத்திநோக்கு வழிக்காட்டலில், சீன-பாகிஸ்தான் அனைத்து நிலைகளிலும் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு இடைவிடாமல் விரிவடைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சர் டார் கூறுகையில், பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து, கட்சி வழிமுறையின் மூலம் இரு நாட்டுத் தலைவர்களின் பொது கருத்தை எட்டி, இரு நாட்டறவு மேலதிகமான சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author