2021ஆம் ஆண்டு ஜூலை திங்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷி ச்சின்பிங், சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் லின் ச்சி நகரத்தின் காலா கிராமத்திற்கு பணி பயணம் மேற்கொண்டு கிராமவாசிகளை சந்தித்தார். இவ்வாண்டு சிசாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். அண்மையில், காலா கிராமவாசிகள் ஷி ச்சின்பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அங்குள்ள வளர்ச்சி நிலைமையையும் முன்னேற்றங்களையும் அறிமுகப்படுத்தினர்.
இதற்காக ஷி ச்சின்பிங் அவர்களுக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,
நீங்கள், எல்லைப் பகுதியை செழுமையாக்கும் கொள்கையின் வழிகாட்டலின் மூலம், தேசிய இன ஒன்றிணைப்பைப் பேணிக்காத்து, மேலும் இனிமையான வாழ்க்கையை உருவாக்க பாடுபட வேண்டும். பீடபூமியிலுள்ள அழகான இயற்கை காட்சியைப் பாதுகாத்து, செழுமையான எல்லைப் பகுதியைக் கட்டியமைப்பதற்கு பங்காற்ற வேண்டும் என்றார்.