சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடரின் செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
அப்போது, கடந்த ஆண்டில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பணி குறித்து செய்தித்தொடர்பாளர் லியூ ஜெய்யீ விளக்களித்து கூறுகையில், சீன நவீனமயமாக்க கட்டுமானம், சீர்திருத்தத்தின் மேம்பாடு, உயர்தர வளர்ச்சி, சமூகத்தின் இணக்கம் மற்றும் நிதானம் முதலிய துறைகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு முக்கிய பிரச்சனைகள் குறித்த 42 சிறப்பு ஆய்வுகளுக்கு ஏற்பாடு செய்தது.
மேலும், 85 முறை கலந்தாய்வு நடவடிக்கைகளை நடத்தி, 5000க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை கையாண்டு பதில் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்கள், கிராமப்புறம், தொழில்சாலை, கல்லூரி, குடியிருப்பு பகுதி ஆகியவற்றில், பல்வேறு தொழில்கள் மற்றும் அடிமட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்டறிந்தனர். இது, கட்சி மற்றும் அரசின் தீர்மானங்களின் அமலாக்கத்துக்கு சேவை அளிக்கின்றது. கலந்தாய்வு அமைப்பு, நாட்டு ஆட்சிமுறையில் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை இது வெளிகாட்டியதாக லியூ ஜெய்யீ தெரிவித்தார்.