உதயநிதி ஸ்டாலின் இன்று எனக்கென்று எந்தவித ஜாதியோ, மதமோ கிடையாது என்று சொல்லியிருப்பது திமுக-வின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது என்றும், மேலும், இந்த விவகாரத்தில், உதயநிதி பயந்து, அஞ்சி, நடுங்குவது வெளிப்படையாக தெரிகிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,
கடந்த வருடம் இதே நாளில் (23/12/2022) “நான் கிருஸ்துவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் இன்று (23/12/2023) “எனக்கென்று எந்தவித ஜாதியோ, மதமோ கிடையாது” என்று சொல்லியிருப்பது தி மு க வின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. தான் நாத்திகவாதி என்ற முத்திரையோடு…
— Narayanan Thirupathy (@narayanantbjp) December 24, 2023
தமிழக பாஜக துணத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது X பதிவில், கடந்த வருடம் இதே நாளில் (23/12/2022) “நான் கிருஸ்துவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் இன்று (23/12/2023) “எனக்கென்று எந்தவித ஜாதியோ, மதமோ கிடையாது” என்று சொல்லியிருப்பது திமுக-வின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது.
தான் நாத்திகவாதி என்ற முத்திரையோடு அரசியல் செய்ய விரும்பிய உதயநிதி, தனக்கெதிராக எழுந்த எதிர்வினையை கண்டு, ஹிந்து விரோத திமுக என்ற முத்திரை தன் கட்சிக்கு விழுந்து விட்டது கண்டு தற்போது பயந்து, அஞ்சி, நடுங்குவது வெளிப்படையாக தெரிகிறது.
தைரியமிருந்தால் சனாதன தர்மத்திற்கு (ஹிந்துமதத்திற்கு) எதிரான தனது கொள்கையில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக நிற்க வேண்டியது தானே? ஓட்டுக்காக ஒரு வருடம் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக தம்பட்டம் அடித்து கொண்டு, பின்னர் மீண்டும் ஓட்டுக்காக தனக்கு மதமே இல்லை என்று சொல்வது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல முதிர்ச்சியற்ற அரசியல் என விளாசியுள்ளார்.